*நான்காம் ஆண்டில் அன்பு வானொலி*
தகவல் தொழில்நுட்பம் உலகத்தை உள்ளங்கையில் கொண்டுவந்த பின்பு வாட்ஸ்அப், பேஸ்புக், டுவிட்டர், யூடியூப் என்று இவைகளுக்குள் மக்கள் மூழ்கிக் கிடந்தாலும் இன்றும் வானொலிக்காகவே ரசிகர் கூட்டமும் உள்ளது, எதிரொலியைக் கேட்டு வானொலியை படைத்தாலும், எளிய மக்களின் எதிரொலியாக வானொலி இன்னும் விளங்கிக்
கொண்டுள்ளது..
70,80 ஆண்டில் வானொலி என்பது தமது வீட்டில் உள்ள ஒரு உறுப்பினராய் மாறியிருந்தது. அவர்களின் அன்றாட பணிகள் வானொலியோடு தொடங்கி, இரவு வானொலியோடு முடிந்தது,உழைத்து களைத்துப்போன மக்களுக்கு உற்சாகம் தருவதாக வானொலி விளங்கியது, வேலை செய்துகொண்டே வானொலி கேட்கும் போது அந்த வேலை சலிக்காமல் போய்விடுகிறது..
விவசாயிகள், தொழிற்சாலை தொழிலாளிகள், பேருந்து பயணிகள், வயது முதிர்ந்தோர், இல்லத்தரசிகள், மாணவர்கள், ஆசிரியர்கள் பொதுமக்கள் போன்றவர்களை ஒருங்கிணைத்து சமுதாயத்தோடு பின்னிப் பிணைந்து, உலகில் எந்த ஒரு பகுதியில் இருந்தும் கேட்கும்படியான தகவல் தொழில்நுட்ப சாதனமாக வானொலி உள்ளது..
அலைவரிசையில் வலம் வந்த வானொலி தற்போது நாம் பயன்படுத்தும் கைபேசி வழியே இணையதளம் மூலம் வானொலி இப்போது வளர்ச்சி அடைந்துள்ளது தற்போது இணையதளம் மூலம் மட்டும் தமிழகத்தில் பல நூறு இணையதள வானொலி செயல்பட்டுக் கொண்டிருந்தாலும், அவற்றில்,
திசை எங்கும் இசை பரப்பிக் கொண்டிருக்கும், உலக தமிழர்களின் இல்லத்திலும் உள்ளத்திலும் ஒலித்துக் கொண்டிருக்கும், ஒரு ஒப்பற்ற இணையதள வானொலியாய் விளங்கி கொண்டிருக்கும், அன்பு வானொலி ஒரு லட்சத்துக்கும் அதிகமான நேயர்களை கொண்டு தொடர்ந்து இணையத்தள வானொலியில் முதல் இடத்தை தக்க வைத்து வெற்றி நடை போட்டுக் கொண்டிருக்கும் அன்பு வானொலி ஜனவரி 17, 2017 இல் தனது பயணத்தை துவங்கி தற்போது 4 ஆம் ஆண்டை நோக்கி தமது வெற்றி பயணத்தை துவங்கியுள்ளது..
அன்பு வானொலியின் மகத்தான இந்த வெற்றிக்கு காரணம் அதன் அன்பு என்ற பெயர்தான் அன்பை பிடிக்காதவர்கள் யாருண்டு, பெயரை கேட்டவுடனே அன்பு எனும் பெயர் மனதில் பசை போல ஒட்டி கொள்வதாகவே பலரும் சொல்லக் கேட்கிறோம். பின்பு அதன் படிப்படியான வளர்ச்சி மற்றும் அர்ப்பணிப்பு உணர்வோடு பணியாற்றிய அந்த தொகுப்பாளர்கள், மற்றும் அவர்களுக்கு முழு சுதந்திரம் அளிக்கும் இயக்குனர், மற்றும் பேரன்பு கொண்ட அதன் அன்பு நேயர்களே.
அன்பு வானொலியின் மகத்தான சிறப்பம்சம் அன்பு வானொலி தொடங்கிய நாளிலிருந்து இன்றுவரை கிட்டத்தட்ட நூற்றி ஐம்பதுக்கு மேற்பட்ட தொகுப்பாளருக்கு எந்தவித கட்டணம் பெறாமல் வாய்ப்பு கொடுத்து, பயிற்சி அளித்து அவர்களை மிகப்பெரிய தொகுப்பாளராக உருவாக்கியுள்ளது. மேலும் புதிய 5 இணையதள வானொலி உருவாக முக்கிய காரணமாகவும் இருந்துள்ளது. மேலும் வணிக நோக்கத்தோடு செயல்பட்டு விளம்பரங்களை வாங்கி நிகழ்ச்சியில் நிரப்பிடாமல் சமூகப் பணியும் தமிழ்ப்பணியும் செய்து மக்கள் வானொலியாக சமத்துவ வானொலியாக வலம் வருவதே..
தற்போது நான்காவது ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ள அன்பு வானொலி அதன் இயக்குனர் கடுகு சிறுத்தாலும் காரம் குறையாது என்பது போல, இளவயதிலேயே பல்வேறு தொழில்நுட்பங்களை அறிந்து, பல வானொலி நிகழ்ச்சிகளைக் கேட்டு தகவல்கள் திரட்டி, புதிய தொகுப்பாளருக்கு வாய்ப்பு கொடுத்து, தன்னலமில்லாமல் பொதுநல நோக்கோடு செயல்பட்டு, மக்களுக்காக சமுதாய வானொலியாக நடத்திக் கொண்டிருக்கும் அன்பழகன் அவர்கள்..
கடந்த சில மாதங்களாக வானொலியை அர்ப்பணிப்பு உணர்வுடன் செயல்பட்டு, பல புதுமையான நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி, உச்சத்துக்குக் கொண்டு சென்ற தொகுப்பாளர்களாக,,
காலை 6 மணிக்கு தெய்வீக ராகத்துடன் காலை பொழுதை ஆன்மிகத்தோடு, தொடங்கி அதிகாலையிலேயே நிகழ்ச்சி வழங்கும் பேராசிரியர் பாரதிராஜா,.
அழிந்து வரும் நாட்டுப்புறக் கலைகளை மேம்படுத்த, மீட்டெடுக்க, தினமும் காலை 7 மணிக்கு தேனிசைத் தென்றல் நிகழ்ச்சியின் வாயிலாக தினம் ஒரு நாட்டுப்புற பாடகருடன் நேர்காணல் செய்து நாட்டுப்புற பாடல்களை வெளிக்கொண்டுவரும் தமிழ்க்கனல் அவர்கள்,
காலை 8 மணிக்கு புதிய கீதம் நிகழ்ச்சியில் காலை நேரத்தை உற்சாகப்படுத்த, இனிமையாக்க புதிய கீதத்துடன் புத்துணர்வு தரும் பேச்சால் காலை நேரத்தை புது பொலிவாக்கும் ரஷிகா..
காலை 9 மணிக்கு நினைத்தாலே இனிக்கும் நிகழ்ச்சி மூலம் தினம் ஒரு தலைப்பில் நேயர்களுடன் பங்கேற்று,எளிமையாக, எதார்த்தமாக பேசி கருத்துக்களை பகிர்ந்திடும் தேவகோட்டை கல்யாணி..
12:00 மணிக்கு சங்கீத சாரல் நிகழ்ச்சியின் மூலம்,நண்பகலை குளுமையாக்க சங்கீத சாரலாய் பாடல்களை தெளித்து விட்டு, சந்தோஷ கடலில் மிதக்க விடும் இலியாஸ் மைதீன்..
நண்பகல் 1 மணிக்கு கற்றது கையளவு நிகழ்ச்சியில் கேட்க நேயர்களுக்கு கையளவு இல்லாமல் கடலளவு தகவல்களையும் வாரி வழங்கும் சண்முகி..
நண்பகல் 2 மணிக்கு தினம் ஒரு திரைத்துறையைச் சேர்ந்த ஆளுமையை தனது நிகழ்ச்சியின் மூலம் நேர்காணல் செய்திடும் மணிகண்டன்..
நண்பகல் 3 மணிக்கு தினம் ஒரு தகவல் தந்து, கேட்கும் நேயர்களுக்கு அறிவுக் களஞ்சியமாக,
ஒரு மணி நேரத்தை நூலகம் சென்று படிக்கும் உணர்வை உருவாக்கிக் கொண்டிருக்கும் நந்தினி..
மாலை 4 மணிக்கு இசை தென்றலாய் இதமான பாடல்களை ஒளிபரப்பாக்கி மாலையை உற்சாகத்துடன் வரவேற்று மகிழும் பாடல்களை தகவல்களுடன் ஒலிபரப்பு செய்திடும் செல்வத்தாய்.
மாலை 5 மணிக்கு மாலை தென்றல் நிகழ்ச்சியின் மூலம் வானொலிக்கு முதல் விளம்பரத்தைத் தேடித் தந்து, மனது மயங்கும் மாலை நேரத்தில் கானங்களை தகவல் களஞ்சியத்துடன் ஒளிபரப்பு செய்யும் மாரிமுத்து.
மாலை 6 மணிக்கு தேடி தெளிவோம் என்ற நிகழ்ச்சியின் மூலம் பல்வேறு ஆன்மீக தகவல்களை, விழாக்கால நேரலை வர்ணனைகளை, தொகுத்து வழங்கி பல அரிய தகவல்களை திரட்டிக் கொடுத்திடும்,
செல்வ மாரிமுத்து..
இரவு 7 மணிக்கு அன்பு ராகங்கள் நிகழ்ச்சியின் மூலம் வாரத்தின் ஏழு நாட்களும் ஏழு விதமான நிகழ்ச்சிகளை கொடுத்து குறுகிய காலத்தில் தனக்கென மிகப்பெரிய ஒரு ரசிகர் பட்டாளத்தை உருவாக்கி, தமிழும் இலக்கியமும் வளர்த்து வரும் கோவை கவி புவனா..
இரவு 8 மணிக்கு அன்பு வானொலியின் அடையாள குரலாய் இருந்து, அன்றாட நிகழ்வுகளை அள்ளித் தெளித்து வாரம் இரு ஆளுமைகளை நேர்காணல் செய்து அன்பு வானொலியின் தூணாய் விளங்கிடும் மூத்த தொகுப்பாளர் தங்கராஜ்..
இரவு 9 மணிக்கு நேயர்களை நேரலையில் இணைத்து விருப்பப் பாடல்களை ஒளிபரப்பி, எதார்த்த பேச்சால் எல்லோர் மனதிலும் இடம்பிடித்த அன்பு வானொலியின் மற்றுமொரு தூண்களில் ஒருவராக விளங்கும் ஹரி..
இரவு 10 மணிக்கு காற்றோடு கவிதை நிகழ்ச்சியின் மூலம் உலகில் எந்த ஒரு வானொலிப் செய்திடாத அறிய முயற்சியாக தினமும் ஒரு படைப்பாளியை அவரின் படைப்புகளோடு, வாழ்வியலோடு இதுவரை 130 சிறப்பு நேயர்களை அறிமுகப்படுத்திய கவித்துளி குமார்.
என இவர்கள் போன்ற அற்பணிப்பும், ஆற்றலும் நிறைந்த தொகுப்பாளர்கள், முழு சுதந்திரம் வழங்கி, புதிய தொகுப்பாளருக்கு வாய்ப்பு வழங்கிடும் இயக்குனர், அன்பு வானொலியை தனது இல்லத்திலும் உள்ளத்திலும் ஏந்தி கொஞ்சி மகிழும் உயிரினும் மேலான அன்பு நேயர்கள், விளம்பரதாரர்கள், பத்திரிகைகள், என அத்தனை பேரின் பேராதரவுடன், இன்னும் ஆண்டுகள் பல கடந்து பல சாதனைகளை செய்ய ஆயத்தமாகி, தனது நான்காவது ஆண்டில் பயணிக்கிறது உங்கள் அன்பு வானொலி..
வாழ்த்துங்கள் வளர்வோம்..
படைப்பு...
*கவிஞர்*
*கவித்துளி குமார்* *தொகுப்பாளர்*
*காற்றோடு கவிதை* *நிகழ்ச்சி*
*அன்பு வானொலி*.
Subscribe to:
Post Comments (Atom)
ஐந்தாம் ஆண்டில் அடி எடுத்து வைக்கும் அன்பு வானொலி அன்பு வானொலி ஜனவரி 17, 2017 இல் தனது பயணத்தை துவங்கி தற்போது 5 ஆம் ஆண்டை நோக்கி தமது வெ...
-
💜 அன்பானவர்களே இணையதள வானொலியில் ஒரு புதிய புரட்சி, அன்பு வானொலியின் காற்றோடு கவிதை நிகழ்ச்சி, இதுவரை 200 ஆளுமைகளை அவர்களின் வாழ்வியலோடு ...
-
ஐந்தாம் ஆண்டில் அடி எடுத்து வைக்கும் அன்பு வானொலி அன்பு வானொலி ஜனவரி 17, 2017 இல் தனது பயணத்தை துவங்கி தற்போது 5 ஆம் ஆண்டை நோக்கி தமது வெ...
No comments:
Post a Comment